Monday, July 14, 2008

கனவில் மட்டும் வராதே


ஊரே உறங்கி கொண்டிருக்கும்
உன்னதமான இரவு வேலை....
நிலா மகளும் விழித்திருக்கும்
நிசப்தமான இரவு நேரம்....
வான பூமியில் நட்சத்திரங்களும்
கொட்டி கோலம் போட்டு
கொண்டிருக்கும் இன்னிசை இரவு ...
சில்லென்ற பனி காற்றில்
உன்னை நினைத்துக் கொண்டு
சிறகுகள் விரித்து பறக்கின்றேன்
ஒரு பறவையை போல...
அப்படியே கண்ணிமைகள் கட்டி அணைக்க
உறக்கத்தின் வசப்படுகிறேன் நான்....
இடையில் உன்னை கனவில் காண
திடுக்கிட்டு விழிக்கிறேன்...
தூக்கத்திலும் வந்து விட்டாயா
என் நிம்மதியை குலைக்க....
உன்னிடம் ஒரு கோரிக்கை...
தயவு செய்து கனவில் மட்டும் வராதே...
யாருக்கு தெரியும் என்
கடைசி உறக்கம் அதுவாக கூட
இருக்கலாம் பெண்ணே...
என்னை வாழ விடு....
--ரவிஷ்னா

1 comment:

Ravishna said...

நண்பர்களே, இந்த கவிதை ஹலோ பண்பலையில்
"குல்பிய்" என்னும் நிகழ்ச்சியில்
ஜூலை பதினாறு இரவு ஒன்பது பத்துக்கு
ஒளிபரப்பானது என்பதை மகிழ்ச்சியுடன்
தெரிவித்துக் கொள்கிறேன்...
இதனை கேட்ட அனைத்து நண்பர்களுக்கும்
என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.....

--ரவிஷ்னா