Tuesday, July 29, 2008

சொல்லடி என் தேவியே


நான் உன் மீது கோபப்படும் போது
என் மீதான அன்பு இரட்டிப்பு
ஆகுவதாக கூறுகின்றாய்.
பசப்பு வார்த்தைகளை நம்புபவன் அல்லன் நான்.
இப்பொழுதும் நான் உன் மீது கோபப்படுகிறேன்.
நீ என்னை பிரிந்தமைக்காக ....
இப்பொழுதும் என் மீதான அன்பு
இரட்டிப்பாகுகிறதா???
சொல்லடி என் தேவியே
--ரவிஷ்னா

தப்பித்தார்கள்

சேர,சோழ,பாண்டியர்
காலத்தில் போர்க்களத்தில் கூரிய
ஆயுதங்கள் pஅயன்படுத்தினார்கலாம்....
பொருட் செலவு எவ்வளவோ???
தெரியவில்லை....
நீ அப்பொழுது உதித்திருந்தால்
நீ உதிர்க்கும் வார்த்தைகளிலேயே
எதிரிகளின் உயிர் உதிர்ந்திருக்கும்....
நல்ல வேளை
தப்பித்தார்கள்.
--ரவிஷ்னா

இரத்தம் சிந்தினேன்

வியர்வை சிந்த விளையாடினால்

உடலுக்கு இனிது...

விளையாடிவிட்டாள் என்

இதயத்தோடும்,வாழ்க்கையோடும்.....

சிந்தியது வியர்வை அல்ல....

இரத்தம்..... சிந்தப்பட்டது என்னிடமிருந்து,

என் இதயத்திடமிருந்து ...

தவறாக புரிந்து கொண்டாள் போலும் ....

--ரவிஷ்னா

Monday, July 28, 2008

புரிதல் எனப்படுவது


எதற்காகவோ வந்த சண்டையில்
உன்னிடம் நான் பேச மாட்டேன்
என்று நானும்,நீயும்
மாறி மாறி கூற நேரமும் முடிய
பிரிந்து சென்றோம் அன்று....
மீண்டும் சந்தித்த போது
பந்தயத்தை மறந்து இருவருமே
பேச இதழ் விரிக்கும் போது,
நேற்றைய நினைவுகள் நிழலாட
அமைதி காத்தோம்.....
ஒருவருக்கொருவர் உள்ளேயே
திட்டிக் கொள்கிறோம்....
நீ தான் பேசினால் என்ன ???
சரி நாம் தான் விட்டுக்
கொடுப்போமே என்று
நினைத்து ஒன்றாக இருவருமே
பேச ஆரம்பிக்கிறோம்....
பேசிக்கொண்டாலும், பேசாமல் இருந்தாலும்
ஒருவர் மனதை ஒருவர் புரிந்து
கொள்கிறோம் தோழியே!!!
புரிதலில் உள்ளது காதல்....
பிரிதலில் இல்லை காதல்...
அப்படியே பிரிந்தாலும் அது
காதல் இல்லை....
அதில் காதலும் இல்லை...
--ரவிஷ்னா

Sunday, July 27, 2008

கனவிலும்,நினைவிலும்


உறங்குகின்ற போது கண்களை

விழித்துக் கொண்டே உறங்குகின்றேன்....

கண்களை மூடினால் தான்

கனவுகள் வரும்....

கனவுகள் வந்தால் அதில்

நீ தான் வருவாய்....

உன் வருகையை நான்

விரும்பவில்லை கனவிலும்,நினைவிலும்.

--ரவிஷ்னா

என் செய்வேன் நான்???


இப்பொழுதெல்லாம் நான் உறங்க மறுக்கிறேன்...

உன் நினைவுகள் கனவிலும்

வலி கொடுத்து விடும்

என்பதற்காக .....

விழித்துக் கொண்டு இருந்தாலும்

உன் நினைவுகள் வலியினை மட்டும்

தந்து செல்கின்றன.....

என் செய்வேன் நான்???

--ரவிஷ்னா

சிரிக்காதே


பெண்ணே !!!உன்னை சிரிக்க வேண்டாம்
என்றேன் கேட்டாயா???
இப்போது கள்ளர்கள் கோணிப் பையை
எடுத்துக் கொண்டு வருகின்றனர்...
சிந்திய முத்துக்களை அள்ளுவதற்கு....
--ரவிஷ்னா

காதலுக்காக


ஒரு வேளை எங்களுடைய
காதல் தோல்வி அடைந்தால்
எனக்காக அவளும்,
அவளுக்காக நானும்
உயிர் துறக்க மாட்டோம்....
காதலுக்காக நாங்கள் இருவருமே
உயிர் துறப்போம்...
--ரவிஷ்னா

அம்மா


கடவுள் நேரில் வருவதில்லை....
வேறு உருவத்தில் தான்
வருவதாகக் கூறுவர்.....
என்னிடம் என் தாய் என்னும்
உருவத்தில குடியிருக்கிறார்....
--ரவிஷ்னா

இதயம் வலிக்கின்றது


இதயத்தில் வலிகள் பல உள்ளன....
ஒவ்வொரு வலிகளும் வந்த
வழிகள் வேறு....
நீ வந்த வழியில் வந்த
வலிகள் பலவாறு.....
எல்லா வலிகளையும் மறந்து
எந்தன் வழியில் செல்கின்றேன் ....
மீண்டும் என் வழியில் வழிய வருகின்றாய்...
வளியில் உந்தன் நினைவுகளை
விட்டாலும் வலிகள் மீண்டும்
எந்தன் இதயத்தில் வழிகின்றன...
இது தொடர்ந்தால் ஒரு வேளை
என் இதயம் சுருங்கி விரிவதற்க்குக்
கூட இடமில்லாமல் போய் விடும்....
நீ போய் விடு பெண்ணே!!!
என்னை வாழ விடு பெண்ணே!!!
--ரவிஷ்னா

Friday, July 25, 2008

ஒன்று தான் நீயும் நானும்

கல்லால் ஆன இதயத்தோடு வாழும் நீயும்,

இதயத்தை எங்கேயோ தொலைத்து விட்டு

இதயமில்லாமல் வாழும் நானும்

ஒரு வகையில் ஒன்றானோம் ....

--ரவிஷ்னா

அணையப் போகின்ற விளக்கு-என் இதயம்


அமைதியாய் இருந்த என் மனம்
ஆரவாரத்தில் குதிக்கின்றது
உன்னைக் கண்ட நாள் முதல்...
இது எதற்காக என்பதை நான் அறியேன்...
ஒரு வேளை இவ்வாறாக இருக்கலாம்...
அணையப் போகின்ற விளக்கு
பிரகாசமாய் எரியும் என்பார்களே!!!
--ரவிஷ்னா

Thursday, July 24, 2008

நீ என் உலகம்


உலகம் உருண்டை.
யார் சொன்னது???
எனக்கு உலகம் ஐந்து அடியும்
ஐம்பது கிலோ எடையும் தான்...
உன்னை தான் கூறினேன்...
பெண்ணே!!!
நீ என் உலகம் என்று......
--ரவிஷ்னா

வசதி குறைவு

செல்வ செழிப்பில் பிறந்து
பஞ்சு மெத்தையில் புழங்கிய நீ
எப்படி என் சிறிய இதயத்தில்
குடியிருக்கிறாய்???
வசதிகள் குறைவு தான்.
சமாளித்துக் கொள் பெண்ணே!!!
--ரவிஷ்னா

பழைய நினைவுகள் இன்றும் புதியதாய்


நீயும் நானும் ஓடி விளையாடிய
கடற்கரை மணலும்,
சிறு சிறு கேலி கூத்துக்கு
நீ என் மீது கோபித்துக்
நான் உன்னிடம் வந்து செல்லமாக
பேசி உன்னை சமாதான படுத்துவதும் ,
பின்னர் நீ "ச்சி போடா" என்று
என் தோள் மீது சாய்ந்து கொள்வதும்,
அந்த இனிமையான தருணங்களை
இன்று நினைத்தாலும் நெஞ்சம் கணக்கிறது.
நீ இன்று எப்படி இருக்கிறாய்???
நான் இன்று உன்னை நினைக்கின்ற
நேரத்தில்,நீ என்ன செய்கிறாய்
என்று எனக்கு தெரியாது....
என்னை போல்
நினைத்து பார்க்க நேரம் இருக்கிறதா???
இருந்தால், என்னை பற்றி நினைத்து
பார்க்கிறாயா???
நம் காதல் நினைவுகளை பற்றி
நினைத்து பார்க்கிறாயா???
நாம் ஒன்றாய் இருந்த
தருணங்கள் உன்னையும் மன
உளைச்சலுக்கு ஆளாக்குகிறதா????
அப்படி செய்தால் நிச்சயம்
இன்னும் நம் காதல் நம்மோடு
வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது
என் தேவதையே!!!
பழைய நினைவுகள் இன்றும்
புதியதாய் வந்து விடுகின்றன தான்....
--ரவிஷ்னா

Wednesday, July 23, 2008

எவ்வாறு இருக்கிறேன்?


நீ எனை மறந்ததும்
என்னில் இருந்த உனை நீ மறந்ததும்
நான் எக்காலமும் மறவேன்...
வெகுநாட்களுக்கு பிறகு நீ
என்னை காண நேர்ந்தால்,
என்னிடம் நன்றாக இருக்கிறாயா?
இப்பொழுது எங்கு வேலை பார்க்கிறாய்?
திருமணம் முடிந்ததா?
என்றெல்லாம் கேட்க வேண்டாம்....
என்னை மூன்றாவது மனிதரைப்
போன்று பார்க்காமல்,
எப்போதும் போல் பார்த்தால் போதும் ....
ஒரு புன்னகை ஒன்றை
பரிசைத் தந்தால் போதும் ....
உன் அன்புக்கு அப்பொழுதும்
அடிமையாவேன் ......
--ரவிஷ்னா

Tuesday, July 22, 2008

எந்த காதலும் தோற்ப்பதில்லை


எந்த காதலும் தோற்ப்பதில்லை......
காதலுக்காக உயிரை விடுவது
உண்மையில் முட்டாள் தனம் இல்லை.....
தான் அவன்/அவள் மீது கொண்ட
காதல் எவ்வளவு ஆழமானது
என்பதை தெரிவிப்பதே அந்த
புனிதமான இறப்பின் நோக்கமாகும்.....
--ரவிஷ்னா

மழை


என்று தான் என் வேதனை தீருமோ???
தினம் தினம் எங்கேயாவது ஒரு
மூலையில் நான் அழுது கொண்டு
தான் இருக்கிறேன்....
பிறர் அழுது விடக் கூடாதென்பதற்காக....
மழை........
--ரவிஷ்னா

கேட்டுப் பார் பெண்ணே

நான் உன் மீது கொண்ட காதலை
அந்த காற்றிடம் கேட்டு பார்....
என் சுவாசம் நீ தான் என்பதை தெரிவிக்கும்....

நான் உன் மீது கொண்ட காதலை
அந்த மழையிடம் கேட்டு பார்...
நீ என்னை விட்டு பிரிகின்ற போது
என் மனம் படும் வேதனையை
தன் கண்ணீரால் தெரிவிக்கும்.....

நான் உன் மீது கொண்ட காதலை
அந்த நெருப்பிடம் கேட்டுப் பார் ...
நீ என்னை விட்டு விலகிச்
சென்ற நொடிகளில் நான் கொண்ட
கோபத்தை அனலாய்த் தெரிவிக்கும்.....

நான் உன் மீது கொண்ட காதலை
இந்த பூமியிடம் கேட்டுப் பார்...
தன்னை விட அவன் மனம்
பரப்பளவில் பெரியது என்பதையும்
அதில் உன் ஒருத்திக்கு மட்டுமே
இடம் உண்டு என்பதையும் தெரிவிக்கும்.....

நான் உன் மீது கொண்ட காதலை
சூரியனிடம் கேட்டுப் பார்....
நீ இல்லாத போது நான் பட்ட
வேதனையை வெப்பமாக தெரிவிக்கும்...

நான் உன் மீது கொண்ட காதலை
நிலவிடம் கேட்டுப் பார்.....
அதன் அழகில் குறை உண்டு என்பதை
பலமுறை சுட்டி காட்டியமையை தெரிவிக்கும்.....

எதுவும் வேண்டாம்.....
நான் உன் மீது கொண்ட காதலை
உன் இதயத்திடமே கேட்டுப் பார்...
உண்மையில் அது இதயமாக இருந்தால்
அந்த உண்மையை உரைக்கட்டும் .....
--ரவிஷ்னா

Monday, July 21, 2008

மறு பிறவி

எனக்கு மறு பிறவியின் மீது
நம்பிக்கை இல்லை.
ஒரு வேளை அவ்வாறு இருந்தால்
இறைவா தயவு செய்து என்னை
பெண்ணாகவும் ,அவளை ஆணாகவும்
படைத்து விடு...
அதிலும் அவளை விட அழகாக
என்னை படைத்து விடு.....
அப்பொழுது புரிந்து கொள்வாள்
இப்பிறவியில் நான் படும் வேதனையை ....
--ரவிஷ்னா

மௌனம் கலைத்து விடு


பெண்ணே!!!நான் பல முறை என் காதலை
கூறியும் நீ மௌனம் ஒன்றையே
பதிலாக தந்திருக்கிறாய்....
இது தொடர்ந்தால் நீ எனக்கு
மௌன அஞ்சலி செலுத்தும் காலம்
வந்து விடும்.....சொல்லாத காதல்
என்றும் வெல்லாது.....
கூறிவிடு உன் பதிலை
மௌனம் கலைத்தப் பின்னர்
--ரவிஷ்னா

ஒரு உண்மை உண்மையாகிறது


பெண்ணே!! நான் பிறக்கின்ற போதும்
எதையும் எடுத்து வந்தது கிடையாது...
இறக்கின்ற போதும் எதையும் எடுத்துச்
செல்வது கிடையாது......
ஆம் இது உண்மை தான்
நான் என் இதயத்தை விட்டு செல்கிறேன்
இங்கேயே உனக்காக.....
நான் இறக்க போகிறேன்.....
ஒரு உண்மை உண்மையாகிறது பெண்ணே ....
--ரவிஷ்னா

காலம் கனியட்டும்


நான் கவிதை என்று கூறும்
நான்கைந்து வரிகளை படிக்கும்
என் நண்பர்கள் என்னைப் பற்றி
கூறுவது நான் யாரையோ
காதலிக்கிறேன் என்று....
மூன்றாவது மனிதர்கள் அவர்களுக்கு
தெரிகின்ற ஒன்று உனக்கு புரியவில்லை
பெண்ணே நான் என் செய்வேன் ......
ஆனால் நீயோ படித்து விட்டு
நன்றாக இருக்கின்றது என்று இரு
வார்த்தைகளில் கூறிவிட்டு மறைகிறாய் ....
நீ புரிகின்ற காலம் என்று வருமோ ???
அது வரை நான் கண்டிப்பாக காத்திருப்பேன்....
காலம் கனியட்டும்...
உன் மனம் மாறட்டும்....
--ரவிஷ்னா

Friday, July 18, 2008

தலைப்பு தெரியவில்லை


நான் உன் மேல் கொண்டது
நட்பா? காதலா?
தலைப்பு தெரியவில்லை...

நான் உன்னை எப்படி அழைக்க?
தோழியா? காதலியா ?
தலைப்பு தெரியவில்லை...

என் வேதனைக் காலங்களில்
நீ என்னோடு இருந்தாய்.
அந்தக் காலங்களில்
நான் கண்டேன் என் எதிர் காலத்தை...

அப்பொழுது தான் நான் உன் மேல்
அன்பு கொண்டேன்....
இன்னும் தெரியவில்லை
அதன் தலைப்பு...

குழப்பங்கள் எதற்கு நீயே சொல்லி விடு
என்று உன்னை நெருங்கிய நொடியில்
நீ கொடுத்த கடிதம் தெரிவித்தது
அது நட்பு தான் என்பதை...

மெல்லிய புன்னகையுடன்
இடம் பெயர்ந்தேன் வாழ்த்துக்களுடன் ....
தெரியாத தலைப்பு இப்பொழுது தெரிந்தது !!!
--ரவிஷ்னா

Thursday, July 17, 2008

வலிக்கிறது என் மனம்


வறுமையின் துயரத்தால் எவ்வளவோ
வேதனையை அனுபவித்த நான்
அந்த வலியினை தாங்கிக் கொண்டேன்...
ஆனால் பெண்ணே!!!
நீ என்னை மறந்து விடு
என்று கூறிய வார்த்தைகள்
என் இதயத்தை கூரிய ஆயுதத்தைக்
கொண்டு குத்திவிட்டன!!!
என்னால் தாங்க முடியவில்லை
இந்த மன வலியினை.....
இப்படியும் ஒரு வலியா???
--ரவிஷ்னா

Wednesday, July 16, 2008

தனிமையின் கொடுமை











தனிமையின் தன்மை கொடுமையான இனிமை ...
அதனினும் கொடுமை என்பேன் ,
ஒரு மயில் நீ அவ்வப்போது
வந்து செல்வதும்,
நான் ஒருமையாய் இருக்கின்ற போது
உன் நினைவுகள் வந்து செல்வதும்.....

எதுவுமே தெரியாமையால்,
ஒன்றுமே புரியாமையால்,
எதையோ எழுதியமையால்,
இதனைக் கவிதை என்கிறேன்.

இவ்வாறு பலவற்றை எழுதியமையால்
என் பேனாவில் மை தீர்ந்தது.
ஹையோ! என்று பதரியமையை
அறிந்த என் மனது
உன் உடலில் ஓடும் குருதிதனை
ஊற்றி எழுது என்று ஆலோசனை
கூறியமையால் எனக்கும் என் மனதுக்கும்
சிறிய காலம் பேச்சு வார்த்தை இல்லை...

பாவம்!!! என் மனம்
எப்படி அறியும்???
நீ என் குருதியில் கலந்துல்லாய்
என்பதை
--ரவிஷ்னா

Tuesday, July 15, 2008

நண்பர்களுக்கு நன்றி






ஒரு வேளை என் கவிதைகளை
என்னை பிடித்தவர்கள் மட்டும்
படித்திருந்தால் நான் கவிஞன்
ஆகி இருக்க மாட்டேன்.....
மற்ற நண்பர்களும் படித்தமையால்
இன்று கவிஞன் என்று கூற படாவிட்டாலும் ,
கவிஞன் என்ற சொல்லுக்காவது அர்த்தம்
தெரியும் அளவிற்கு வளர்ந்துள்ளேன்....
என் இனிய நண்பர்களுக்கு நன்றி....
--ரவிஷ்னா

சாகா வரம் அல்ல

உன்னை நெருங்கி வருகின்ற
பொழுதெல்லாம் ஏனோ ஒரு தாகம்,
ஏனோ ஒரு தயக்கம் ,
ஏனோ ஒரு அச்சம்
உன்னிடம் என் காதலை சொல்லி விட தடுத்தது ......
இப்படியே நீண்டால் என்றாவது ஒரு
நாள் சொல்லாமலே என் காதல்
தொலைந்து விடும் ....
அப்படியொன்று நிகழ்ந்தால் கண்டிப்பாக
எம தேவனிடம் போராடுவேன்....
என்னை இன்னும் கொஞ்ச காலம்
வாழ விடு என்றல்ல....
உன்னையும் அழைத்து வர வேண்டும் என்று .....
--ரவிஷ்னா

காவிய பொய்

காவியங்களில் நிலவினை "சந்திர தேவன் "
என்று ஆண் பாலாக தான் கூறினர்...
நானும் நம்பினேன் முன்பு ....
உன்னை பார்த்த பின்பு தான்
தெரிந்தது அது பொய் என்பது....
காவியங்களில் கூட பொய் தானோ ???
--ரவிஷ்னா

Monday, July 14, 2008

கனவில் மட்டும் வராதே


ஊரே உறங்கி கொண்டிருக்கும்
உன்னதமான இரவு வேலை....
நிலா மகளும் விழித்திருக்கும்
நிசப்தமான இரவு நேரம்....
வான பூமியில் நட்சத்திரங்களும்
கொட்டி கோலம் போட்டு
கொண்டிருக்கும் இன்னிசை இரவு ...
சில்லென்ற பனி காற்றில்
உன்னை நினைத்துக் கொண்டு
சிறகுகள் விரித்து பறக்கின்றேன்
ஒரு பறவையை போல...
அப்படியே கண்ணிமைகள் கட்டி அணைக்க
உறக்கத்தின் வசப்படுகிறேன் நான்....
இடையில் உன்னை கனவில் காண
திடுக்கிட்டு விழிக்கிறேன்...
தூக்கத்திலும் வந்து விட்டாயா
என் நிம்மதியை குலைக்க....
உன்னிடம் ஒரு கோரிக்கை...
தயவு செய்து கனவில் மட்டும் வராதே...
யாருக்கு தெரியும் என்
கடைசி உறக்கம் அதுவாக கூட
இருக்கலாம் பெண்ணே...
என்னை வாழ விடு....
--ரவிஷ்னா

Sunday, July 13, 2008

அன்புள்ள இறைவனே!!!!!

அன்புள்ள இறைவனே,
ஆத்திரத்தில் நான் எழுதும் கடிதம் ....
நான் இங்கு நலம் இல்லை...
நீயங்கு நலமா ???
கண்டிப்பாக நலமாகத்தான் இருப்பாய் ....
நாங்கள் படும் வேதனையை
கண்டு களிப்பவனாயிற்றே நீ...
ஆகையால் தான் கூறினேன்
இங்குள்ள அனைவருக்கும் உள்ள
பிரச்சனைகள் வேறு வேறு விதம் ......
ஆனால் எல்லாவற்றிற்கும் அடிப்படை
காரணம், பாழாய்ப்போன இந்த
காதல் தான் ....
இவற்றில் இருந்து மீண்டு வருவதற்கு
மூன்று வழிகளை கூறுகிறேன்
தயவுசெய்து அதனை செய்து விடு
இறைவனே!!!
ஒன்று, காதலை அடியொடு
பிடிங்கி விடு
இரண்டு, ஆண்களின் கண்களை
பறித்து விடு
மூன்று, பெண்களுக்கு காதலிக்க
கற்று கொடுத்து விடு ....
இதில் எதாவது ஒன்று நிகழ்ந்தாலும்
நிச்சயம் இந்த உலகம் அமைதி பெரும்
இறைவனே!!!
தகவல் கிடைத்தவுடன் பதில்
கடிதம் அனுப்பவும்...
பதிலை எதிர் பார்த்து ,
--ரவிஷ்னா

Thursday, July 10, 2008

GOOGLE

எனக்கும் GOOGLEKKUM சண்டை
வந்தது.....
எதை கொடுத்தாலும் ஏதாவது நான்கைந்து
இணைய தள முகவரிகளை
கொடுத்துக் கொண்டிருந்தது.....
நான் தோற்று விடுவேனோ
என்று நினைத்தேன் .....
சட்டென்று நினைவுக்கு வந்தது
உன் நினைவுகள் ....
உன் அழகுக்கு இணையான பெண்ணும்
இந்த பூமியில் உண்டா?
என்று வினா தொடுத்தேன்.....
இன்னும் தேடிக் கொண்டிருக்கிறது
பெண்ணே!!!
--ரவிஷ்னா

Wednesday, July 2, 2008

ஆச்சர்யம்

உன்னால் முடியாத ஒன்று
பிறரால் முடிகிற போது
அந்த ஒன்று தான் உனக்கு
ஆச்சர்யமானதாய் தெரியும்....

பிறர் ஆச்சர்ய பட்ட ஒன்று
உன்னால் முடிந்த போது
உனக்கு சாதாரணமானதாய்
தெரியும்.....
--ரவிஷ்னா

தோல்வியும் வெற்றியும்

தோல்வியை கண்டு
துவண்டு விடாதே!!
உண்மையில் வெற்றியை
விட தோல்வி
தான் உன்னை ஊக்கப்படுத்துவதும் ,
உற்சாகப்படுத்துவதும் ஆகும்....

வெற்றி அடைந்தால்
மகிழ்ச்சி கொள்ளாதே
அதனை ஒரு தோல்வியாய்
நினைத்து பார் ....
அதை விட பெரிய வெற்றியினை
நீ அடைந்து விடுவாய் .....
--ரவிஷ்னா