Monday, October 20, 2008

சந்தேகங்களை கேட்க விரும்புகிறேன்


என் தேவதையே!!!
உன்னிடம் சில சந்தேகங்களை கேட்க விரும்புகிறேன்....
உன் அனுமதியோடு....
இறைவன்
உன் கூந்தல் கண்டு தான் மேகம் என்னும்
இருட்டினை படைத்தானோ??
உன் நுதல் கண்டு தான் தாமரையை செய்தனோ??
உன் கண்கள் கண்டு தான் மீன்களை படைத்தானோ??
உன் கன்னங்கள் கண்டு தான் மது கிண்ணங்கள் தந்தானோ??
உன் இரு இதழ் கண்டு தான் ரோஜா மலர் தந்தானோ??
உன் எச்சில் கொண்டு தான் அமிழ்தம் செய்தானோ
உன் உடல் கண்டு தான் தேவதை என்னும்
பெண்களை படைத்தானோ??
உன் நகங்கள் கண்டு தான் பிறையினை படைத்தானோ??
தெரியவில்லை எனக்கு...
ஆனால் உன்னை கண்டும்,உன்னைக் கொண்டும்
தான் நான் கவிதையினை படைக்கிறேன்...
--ரவிஷ்னா

Sunday, October 19, 2008

கண்ணீர் வியர்வை


நீ என் உடன் இருக்கும் போது
உனக்கு நான் முத்த மழை பொழிவதனால்
என் உதடுகள் வேர்க்கின்றன.....
நீ என்னை விட்டு பிரியும் போது
உன் பிரிவு தாங்காமல்
என் கண்களும் வேர்க்கின்றன
கண்ணீராய் ....
--ரவிஷ்னா

காதலிப்பேன்...காதலிப்பேன்...


தேவதையே உன்னை நான் காதலிப்பேன்...
என்றென்றும் நான் காதலிப்பேன்...
நீ எங்கு சென்றாலும் நான் காதலிப்பேன்...
நீ என்னை காதலித்தாலும் நான் காதலிப்பேன்...
நீ என்னை காதலிக்காவிட்டாலும் நான் காதலிப்பேன்...
நீ என்னை மறந்தாலும் நான் காதலிப்பேன்...
நீ வேறு ஒருவனை மணந்தாலும் நான் காதலிப்பேன்...
நான் இறந்தாலும் உன்னை காதலிப்பேன்...
மீண்டும் பிறந்து வந்தால்
உன்னையே நான் காதலிப்பேன்...
உன்னை காதலிக்கும் வரம் ஒன்று
மட்டும் எனக்கு போதும்....
நான் உன்னை காதலிப்பேன்...காதலிப்பேன்...
என்றென்றும் காதலிப்பேன்...
--ரவிஷ்னா

Tuesday, October 14, 2008

பூவின் தவம்


பூக்களெல்லாம் ஒரு நாள் தவம் செய்தன.....
தான் எப்பவும் வாடாத பூவாய்
உன் கூந்தலில் இருக்க வேண்டும்
என்கிற வரம் வேண்டி....
பூவிற்கும் பிரிய மனம் இல்லை
உன்னை விட்டு....
--ரவிஷ்னா

Sunday, October 12, 2008

மௌனிக்கும் புயல்


உன் மௌனம் என்னும் புயலால்
என்னைக் கொல்லாதே
போதும் உந்தன் இன்ப வேதனை.....
உன் பூவென்னும் இதழ் விரித்து
அமிழ்தென்னும் வார்த்தைகளை சிந்திவிடு....
அள்ள காத்திருக்கிறேன்
உன் வார்த்தைகளையும் உன்னையும்....
--ரவிஷ்னா

Wednesday, October 8, 2008

நூலகம்

நீ ஒரு நூலகம்...
உன் அழகு ஒரு புத்தகம்...
இந்த நூலகத்தில் பல்லாயிரக் கணக்கான
புத்தகங்களை காண்கிறேன்....
இருப்பினும் ஒரு சிறிய ஆசை....
எல்லா நூலினையும் நான்
மட்டுமே படிக்க வேண்டும்...
--ரவிஷ்னா

Backup

நீ தலைகோதி முடித்தவுடன்
சுருட்டி எறிந்த முடி,
விரல்களைத் தாண்டி வளர்ந்ததால்
வெட்டப்பட்ட நகத்துண்டு ,
மாலையில் வீசி எறியும்
காய்ந்த பூக்கள்
இவையெல்லாம் மீண்டும் வேண்டும்
என்றால் எங்கும் தேடாதே !!!
என்னிடத்தில் வா...
Backup பத்திரமாக இருக்கிறது