Wednesday, December 17, 2008

சின்ன சின்னதாய்.....

உன்னைக் கண்டு முதன்
முதலாய் வெட்க்க பட்ட என்னைப் போன்று
கடலலையும் உன் பாதம் தொட்டு
மீண்டும் ஓடிச் செல்கின்றது
பாரடி....

நான் உன்னைக் கண்டு
ஒரு யுகம் முடிந்து விட்டது பெண்ணே...
என்ன பார்க்கிறாய்....
ஒரு நிமிடம் ஆனதை தான்
கூறினேன்.....

பூச்செடிகளின் அருகிலேல்லாம் செல்லாதே!!!
காற்றில் பூக்கள் உதிர்ந்து உன்
பாதத்தை புண்ணாக்கி விட
போகின்றன.....

என் இதயத்திற்கு பேசத் தெரியாது...
ஒரு வேலைத் தெரிந்திருந்தால்
துடிப்பதற்கு பதிலாக உன்
பெயரையே உரைத்துக் கொண்டிருக்கும்.....
ஆதவனக்கு ஆணை இட்டுள்ளேன்....
நீ வெளியே வரும் நேரத்தில்
கண்டிப்பாக அஸ்தமனம் ஆகிவிட
வேண்டுமென்று
--ரவிஷ்னா