Wednesday, August 12, 2009

விலகி நிற்கிறேன் சில காலங்களுக்கு


நண்பர்களுக்கு வணக்கம்,
நான் சில மதங்களாகவே கவிதைகள் எழுதுவதில்லை. எனக்குள் எழுந்த சில மாற்றங்கள் என்னை மகிழ்ச்சியடையவும், வேதனையடையவும் வைத்து விட்டது. அதற்கு என் கவிதைகளும் ஒரு வகையில் காரணமே. அதனால் நான் மிகவும் நேசிக்கும் ஒரு தோழமையின் அறிவுரையின் படியும், கட்டளையின் படியும், நான் கவிதை எழுதுவதை சில மாதங்கள் அல்லது வருடங்கள் நிறுத்தி வைக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன். நான் இதை முன்னதாகவே சொல்லியிருக்க வேண்டும். ஏனென்றால் கடைசி பதிவிலிருந்து இது வரை ஆறு மாதங்கள் பக்கம் ஆகிவிட்டன.



நன்றிகளுடனும் வேதனையுடனும்,


ரவிஷ்னா


Thursday, February 5, 2009

அழுகையின் ரத்தம்


எனக்கு ஏற்பட்ட சோகங்களை
நினைத்து பார்கையில் அழுகை
பீறிட்டு வருகிறது
ஏனோ தெரியவில்லை அழுகையை
என்னுள்ளே அடக்கிக் கொண்டேன்
அதனால் அடங்கிப் போன கண்ணீரெல்லாம்
உயிர் பெற்று உடலினுள்
ஓடத் துவங்கியது ரத்தத்திற்கு பதிலாக..........
**************************************************
ரவிஷ்னா
**************************************************

Wednesday, February 4, 2009

பட்டும் மலரும் ரோஜா


என் தோட்டத்தில் பூத்த பல
ரோஜாக்களில் ஒன்றை மட்டும் பறித்து
என்னுடன் வைத்துக் கொள்ள விரும்பினேன்......
நான் பறித்ததாலோ என்னவோ
அது பறித்த உடனேயே காய்ந்து விட்டது.......
இருப்பினும் இன்னும் என்னுள்
அந்த ரோஜாவின் மணம் வீசிக்
கொண்டு தான் இருக்கிறது.......
மறுபடியும் அந்த ரோஜா(அதே ரோஜா) என்
தோட்டத்தில் மலர்ந்து விடும்
என்ற நம்பிக்கையுடன் வாழ்கிறேன்.........
***************************************
ரவிஷ்னா
***************************************

Sunday, January 4, 2009

கொலையாய் ஆன ஒரு மரண தண்டனை


நீ என்னை மறந்த பின்னும்
உன்னையே நினைத்துக் கொண்டிருக்கும்
என்னை பற்றியவை...

உன்னைத் தொட்டு ஓடி
விளையாடிய என் கைகளை காணும் போது
கோவத்தால் துண்டு துண்டாய்
வெட்டி விட்டேன்
இரு கைகளையும்
நீ என்னை மறந்த பின்னும் ..............

உன் உருவத்தை மீண்டும் மீண்டும்
என் கண் முன்னால் கொண்டு வரும்
என் கண்களை
கூறிய ஆயுதத்தை கொண்டு பிடுங்கி விட்டேன்....
நீ என்னை மறந்த பின்னும் .......

உன் வாசத்தையும் சுவாசத்தையும்
தருகின்ற என் சுவாசக் குழாயினை
கத்தியைக் கொண்டு கத்தரித்து விட்டேன்....
நீ என்னை மறந்த பின்னும் ........

உன் வாசத்தையும் சுவாசத்தையும்
தருகின்ற என் சுவாசக் குழாயினை
கத்தியைக் கொண்டு கத்தரித்து விட்டேன்
நீ என்னை மறந்த பின்னும் ........
உன் பெயரை உச்சரிக்கின்ற
என் நாவினையும் வெட்டி விட்டேன்...
நீ என்னை மறந்த பின்னும் ........

உனக்கென்று ஒரு இடம் இருந்த
என் இதயத்தையும் விடவில்லை....
நெஞ்சத்தை கிழித்து இதயத்தை
கையிலெடுத்து கழுத்தினை நெரித்து
கொன்று விட்டேன்.....
நீ என்னை மறந்த பின்னும் ......

மெல்ல தரையில் சாய்கிறேன்.....
உடல் துடித்துக் கொண்டிருக்கிறது......
சற்றே நினைவில் வருகிறாய்.....
மூளையை மட்டும் விட்டு விட்டாய்
என்று அற்புதமாய் சொல்லி நகையாடுகிறாய்......

மகிழ்ச்சியுடன் இறக்கிறேன்....
இல்லை என்னை கொன்று விட்டேன்
மகிழ்ச்சியுடன்
--ரவிஷ்னா