Sunday, June 29, 2008

பேசும் படம்

'படிக்காதவனாய்' இருந்த என்னை
'கல்லூரி' வரை செல்ல வைத்த
என் 'செல்லமே'.உன்னை காணும்
போது என் 'மனசெல்லாம்'
ஒரு வித 'மின்னலே'

'12B' பேருந்தில் பயணம் செய்கிற
நாளெல்லாம் உன்னை கண்டேன்.
இதுவரை எனக்கு தெரியவில்லை
'யாரடி நீ மோகினி' .

உன்னை 'கண்ட நாள் முதல்'
'
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்'

உன் மீது வைத்த 'ப்ரியமுடன்'
எழுதுகிறேன் ஏனோ ஒரு 'காதல் கவிதை' ...

'அழகிய தீயே' உன் 'முகவரி'
கொடுத்து விடு.இல்லை எனில்
உன் 'சூர்யப் பார்வை' யால் என்னை
சுட்டெரித்து விடு ...

உன்னை 'முதல் முதலாய்'
'பார்த்த நாள் முதல்' நான் 'காதல் கொண்டேன்'....
நீ சரி என்று சொன்னால் பெண்ணே உன்னை
என் 'கண்ணுக்குள் நிலவாய்' வைத்து
பாதுகாப்பேன் .....

இறைவனே அவளிடம் நான் என்
காதலை தெரிவிக்க எனக்கு
'வல்லமை தாராயோ' ......

நீ என் பெயரை கூறி
அழைக்கும் போதெல்லாம் என்
'உள்ளம் கேட்குமே' மீண்டும் மீண்டும் ...
உண்மையில் அது ஒரு 'காதல் கோட்டை' ...

பெண்ணே நீ என்னிடம் உன்
'காதல்' (லை ) தெரிவித்த போது
நான் உன்னில் 'கண்டேன் சீதையை' ....
பின்பு இந்த 'ராமன் தேடிய சீதை'
இவள் தானோ என்று
ஒரு 'தேவதையை கண்டேன்' ...

பெண்ணே!!!'இன்று முதல் '
நீ என்னை காதலிப்பதன் மூலமும்
நான் உன்னை காதலிப்பதன் மூலமும்
நாம் 'காதலுக்கு மரியாதையை' செய்து
'காலமெல்லாம் காதல் வாழ்க' என்போம் .....
--ரவிஷ்னா

Tuesday, June 17, 2008

அழகு ஓரு வர்ணனை

தேவியே !!!உன் கூந்தலோடு
ஒப்பிடுகையில் அரச
மரத்தடியில் வீற்றிருக்கும்
விநாயகப் பெருமானும்
வெண்மை தான்!!!

பௌர்ணமி வட்ட நிலவை
வெட்டி எடுத்து, தட்டி
ஒட்டியது போன்றது உன்
நெற்றியில் உள்ள திலகம்!!!

கயல் போன்ற உன் விழிகளை
ஒவ்வொரு முறை விழிக்கும் போதும்
உன் பார்வை படாதா என்று
ஏங்குகின்ற ரோஜா மலர்கள் !!!

உன் மலரினும் மெல்லிய
பூவிதழ் விரித்து நீ
சிந்துகின்ற வார்த்தைகள்
ஒவ்வொன்றும் ஓரு ராகம்!!!

புறாவின் கழுத்தைப் போன்று
குறுகிய சிறு கழுத்தில்
நவமணிகள் மின்னுதல்,இரவில்
வானத்தில் உள்ள நட்சத்திரம்
மின்னுவதைப் போன்றது !!!

சுண்டு விரலும் உன் இடை
கண்டு மெலிந்து விட
எண்ணிக் கொண்டிருக்கிறது போலும் !!!

உன் பொற்பாதங்கள் தரையில்
படாமலிருக்க நான் தூவிய
குறிஞ்சி மலர்கள் உன்
காலுடன் கொஞ்சி விளையாட
எண்ணி குத்தி விட்டால்
என்னை மன்னித்து விடு பெண்ணே!!!

உன்னை வடித்த போது
பிரம்மனும் கவலை
கொண்டிருப்பான் , மானிடனாய்
பிறக்காமல் போனோமே என்று !!!
--ரவிஷ்னா

Wednesday, June 11, 2008

நினைவுகள்

ஒரு நாளைக்கு எத்தனை காட்சிகளை
கண்டாலும், ஒரு சில காட்சிகள் தான்
நினைவில் நிலைக்கின்றன.....
அதைப் போன்று நான் எத்தனை
பெண்களை பார்த்தாலும் உன்
நினைவுகள் மட்டுமே நிழலாடுகின்றன......
--ரவிஷ்னா

நம்பிக்கை

ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கின்ற
பொழுது எண்ணி பார்க்காத மனம்
தந்தையிடம் பணம் வாங்குகின்ற பொழுது
எண்ணி பார்க்கின்றது....
இந்த மனம் மாறினால் தான்
நம்பிக்கை என்னும் நட்சத்திரம் பிறக்கும்.....
--ரவிஷ்னா

Thursday, June 5, 2008

நிலவில் மனிதன்

நிலவில் மனிதன் வசிக்க முடியுமா?
ஆராய்ச்சி செய்கின்றனர் விஞ்ஞானிகள்...
பல நாட்களாக உன் இதயத்தில்
வாழ்கிறேன்
அதை அறியாமல் இவர்கள்
ஆராய்ச்சி செய்கின்றனர்.
இவர்கள் விஞ்ஞானிகளா???
--ரவிஷ்னா

வரம்

இறைவனிடம் வரம் ஒன்று கேட்பேன்
ஒன்று என் நினைவை நிறுத்தி விடு.
அல்லது அவளுக்கு என் நினைவை கொடுத்துவிடு ....
--ரவிஷ்னா