Sunday, August 10, 2008

அந்த நாட்கள்

ஏதோ ஒரு காரணத்தால்
அலுவலகப் பேருந்தை தவறவிட்ட
நான் நகரப் பேருந்தில் பயணிக்கலானேன்......

அன்று தான் அவளைக் கண்டேன்.....
இல்லைக் காணக் கிடைத்தேன்....
முடிவு செய்தேன் என் முதலும்
முடிவும் அவள் தான் என்பதை.....

பின் பேருந்தை தவற விடுவதே
என் வாடிக்கை ஆகிப் போனது...

பேருந்தில் ஏறியவுடன் என்
இருக்கண்களும் மழையைத் தேடுகின்ற
பயிரைப் போல் அவளையே தேடலாயின....

அவள்-ஒரு தேவதை....
இதைத் தவிர வேறதையும்
அறியேன் அவளைப் பற்றி ....

என் மனதில் காதல் பயிர்
முளைத்து நன்கு வளர ஆரம்பித்தது....
உரம் தண்ணீர் எதுவுமின்றி .....

சிறிய புன்னைகையில் ஆரம்பித்து
எப்படியோ என் ஊமைக்காதலுக்கு
பேசும் வரம் கிடைத்து
பேசத் தொடங்கியது அவளிடம்....

எப்படியாவது கூறிவிட வேண்டும்...
எந்திர உறுதியோடு வருவேன்....
அவளைப் பார்த்த பின் புறமுதுகு
காட்டி ஓடும் கோழையாகி விடுவேன் .....

ஒரு நாள் மனம்,தைரியம் போன்ற
என் நண்பர்கள் உடன் வர ,
காதல் என்னும் தாம்பூலத் தட்டினை
ஒற்றை காகிதத்தில் அவளிடம் சமர்ப்பித்தேன் .....

சம்மதத்தை உடனே தெரிவித்திருக்கலாம்.....
இல்லை....சற்றே நீண்டது கடவுளடனான
என் வேண்டுதல் பாவம் .....
படாதபாடு பட்டு விட்டார் என்னாலும்,
என் காதலாலும் சில நாட்கள்.....

அன்று முதல் ஒவ்வொரு
நாள் அவளைக் காணும் போதும் ,
ஆசிரியரைக் கண்டு அஞ்சுகின்ற
மாணவனைப் போல் அஞ்சலானேன்...

அருகருகில் அமர்ந்தும் அமைதிப்
படையே நீடித்தது ....
யார் முதலில் பேச என்பதற்கான
போராட்டம் ஒரு உலகப் போராகவே
நடந்தது எங்களுக்குள் ....

ஒரு முறை என் தாம்பூலத்தட்டு
மீண்டும் ஒரு காகிதத்தில் என்னிடமே
வந்தது...அவளிடமிருந்து.....

ஆனால் இம்முறை அவள் கூட
வந்த தோழிகள்
புன்னகையும் வெட்கமும் மட்டுமே!!!!

'மாலை ஆறரை மணிக்கு
கடற்கரையில் கூடுவோம் ' என்னும்
வார்த்தைகள் அச்சுக்களாய்
பொறிக்கப் பட்டிருந்தன
என் தாம்பூலத் தட்டினில்....

அப்பொழுது முதல் ஒவ்வொரு
நிமிடத்தையும் நகர்த்த
போராட்டம் தான் என்னுள்....

நேரமும் வந்தது...
பேருந்தும் வந்தது...
மழையும் வந்தது....
நானும் வந்தேன்....

ஆனால் அவள் வரவில்லை...
காத்துக் கொண்டிருந்தேன் .....

மழையில் நனைந்த மெல்லிய
மலரனே தத்தி தத்தி வந்தாள்
குழந்தையைப் போன்று ....

பதிலைத் தேடி அவள்
இதழையே வெறித்து பார்த்துக்
கொண்டிருந்த நான்
சற்றும் எதிர் பார்க்கவில்லை....

திடீரென அள்ளி அணைத்து
நெற்றி நுகர்ந்தாள்
' I LOVE YOU ' கூறி

மறக்க முடியவில்லை
அந்த நாட்களை....
--ரவிஷ்னா

Friday, August 8, 2008

என்னுடைய பல வேதனைகளில் சில-3

*வேதனைகள் அதிகரிக்க அதிகரிக்க
மௌனங்கள் கூடுகின்றன.
என்னை பார்த்து என் நிழலும்
கைகொட்டி சிரிக்கின்றது.....
ஆறுதலுக்கு கூட அதுவும் கூட
இருப்பதில்லை....

*மனது வலிக்கின்ற போதெல்லாம்
புல்தரையில் புலம்புகிறேன்
புர்க்களோடு...
அதுவும் என் வேதனையை கேட்டு
அழுது விடுகிறது...
அதன் மேல் கண்ணீரை காண்கிறேன்

*எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக்
கொள்ள முயற்சிக்கிறேன்.....
என்னால் முடியவில்லை ....
என் சிறிய மனம்
குழந்தையைப் போன்று திரும்ப திரும்ப
பழயதை நினைவுக்கு கொண்டு
வந்து விடுகின்றது.....

*என் மனதுக்கு நன்றி
சொல்கிறேன்.சில நல்ல உள்ளங்களின்
நல்ல உணர்வுகளை வெளிக்காட்ட
வைத்தமைக்கு...

*என் கண்களில் இருந்து
வழியும் கண்ணீரை துடைக்க
ஒரு நண்பன் கூட இருந்தது
சற்றே ஆறுதலாக இருந்தது.....
இப்பொழுது அதை எண்ணுகையில் ????
உன்னை மீண்டும் பார்த்தால்
என் கண்ணீரை துடைப்பதர்க்காகவே
நான் அலுத்து விடுவேன்.....
--ரவிஷ்னா

Thursday, August 7, 2008

என்னுடைய பல வேதனைகளில் சில-2

*இன்று முதல் நான் தனிமரம்
ஆனேன்....
என் நண்பர்கள் அனைவரும்
பிரிந்து விட்டனர்.
இருப்பவர்கள் என்னை புரிந்து
கொள்ள மறந்து விட்டனர்.

*ஆரம்பத்தில் என்னால் தாங்க
முடியவில்லை....
இப்பொழுது பழக முயற்சிக்கிறேன்...
தனிமையில் இருக்க ....
பழக்கப்பட்டு விடும் என்ற
நம்பிக்கை இருக்கிறது ....

*எல்லா வற்றையும் மறக்க
நினைக்கிறேன்...
மறக்க முடியவில்லை.....
தனிமையின் புலம்பலாய் போகின்றன
என் மௌனங்கள் ....

*கூட்டத்தில் இருக்கும் மரங்களை
விட தனியாய் இருக்கும் மரங்களுக்கே
மௌசு அதிகம்.
மற்றவர்களின் பார்வை அதன் மேல் படும்...
இவ்வாறு பல வசனங்களை கூறி
தேற்றி கொள்கிறேன் என் அடங்கா மனதை.
--ரவிஷ்னா

பின் குறிப்பு:
வழிகள் இருந்தால் கூறவும்.

என்னுடைய பல வேதனைகளில் சில

*நான் அழுகின்ற போதெல்லாம்
யார் யாரோ கேட்கிறார்கள் ,
ஏன் அழுகிறேன் என்று .
அப்பொழுது தான் நான் அதிகமாக அழ
நினைப்பேன் …
ஆனால் காரணம் தெரிந்த நீயும்
இவ்வாறு கேட்கையில் வந்த அழுகையும்
நின்று விடுகிறது .
வற்றி போன உன் இதயத்தை
நான் இனியும் என்னுடன்
வைத்துக் கொள்ள விரும்பவில்லை .....

*மறந்து போன என் இதயம்
உன்னை நினைக்கின்ற போதெல்லாம்
நான் என்னையே அரைந்து கொள்வேன்
இப்பொழுதெல்லாம் நான் என்
கன்னத்தில் அரைவதையே வேலையாககொண்டுள்ளேன்.

*நான் மரணத்தின் விளிம்பில் நிற்கிறேன்...
உன் பதில் எதுவாக இருந்தாலும்
என் மரணம் நிச்சயம்.
சரி என்றால் உனக்கும் இதயம் இருக்கின்றது
என்ற அதிர்ச்சியில் இறப்பேன்.....
இல்லை என்றால் உனக்கு இதயமே இல்லை
என்ற ஆச்சர்யத்தில் இறப்பேன்.....

*ஆவிகள் உள்ளனவா இல்லையா ?
தெரியவில்லை.
ஆனால் காதல் என்னும் இடுகாட்டில்
கல்லறை என்னும் இல்லத்தில்
என்னை போன்ற ஆவிகளும்,
உலாவுகின்றன.
உண்மையில் அது ஒரு தண்டனையை
தனக்குத் தானே கொடுத்துக் கொள்வது....

*நீ உலகத்தின் எந்த தேசத்தில் இருந்தாலும்
எந்த மூலையில் இருந்தாலும்
உன்னைக் கண்டுபிடித்து விடுவேன்....
அதிசயப் பிறவியை அனைவரும் அறிவர் அன்றோ???
கல் என்னும் இதயத்தை
சுமப்பவள் அல்லவா நீ???

*காதலில் தோல்வி கண்டவர்கள்
ஒரு தலைக் காதலில் தோல்வி
அடைந்தவர்களை கண்டு
நிம்மதியடைய வேண்டும்.
சொன்ன காதலில் தோல்வியைக் காட்டிலும்
சொல்லாத காதல் தோல்வி அடைவது
பெரியத் துன்பம்.



Monday, August 4, 2008

நீ நான் காதல்


நீ என்னை மறந்து
நான் உன்னை மறந்து
நாம் உலகத்தினை மறந்து
உயிர் தந்த பெற்றோரை மறந்து
உடனிருக்கும் நட்பினை மறந்து
தொலைபேசியில் மணிகணக்காய்
அரட்டை அடிப்பதில் இல்லை -
உண்மைக் காதல்.....
கடற்கரையில் அமர்ந்து
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
கனவு காண்பதில் இல்லை -
உண்மைக் காதல்.....
உல்லாச உணவகங்களில்
ஒரு குவளை தேநீரை
ஒரு மணி நேரம் உறிஞ்சுவதில் இல்லை-
உண்மைக் காதல்.....
உண்மையான காதல் என்னவெனில் ,
உறங்கச் செல்லும் முன் ஒரு நிமிடம்
உன்னை நினைக்கிறேன்-
இது என் உண்மைக் காதல்.....
பேருந்தில் பயணிக்கின்ற போது
சன்னலோர இருக்கையில் அமர்ந்து
சில்லென காற்றின் ஈரப்பதத்தில்
உன்னை நினைக்கிறேன்-
இது என் உண்மைக் காதல்.....
நான் உணவுண்ணும் போது
முதல் வாய் எடுத்து வைக்கையில்,
நீயும் உண்டிருப்பயா???
என்று எனக்கு நானே கேட்டுக் கொள்வேன்....
இது என் உண்மைக் காதல்......
இது வரை உன்னை நான் பார்த்த தில்லை ...
கதைகள் பல பேசியதில்லை.....
இவ்வாறுதான் இருப்பாய் என்று
எனக்குள்ளே உனக்கு ஒரு உருவகம்
கொடுத்து ஒரு உருவமாய் பார்க்கிறேன்.....
வா பெண்ணே காதல் என்னும் கடலில்
ஊடல் என்னும் ஓடத்தில்
உலகினை சுற்றலாம் கனவில்......
நீ ஒரு குழந்தை....
நானும் ஒரு குழந்தை.....
காதல் நம் குழந்தை......
நீ !!!!நான்!!!! காதல்!!!!!
இது போதும் எனக்கு
--ரவிஷ்னா