Sunday, August 10, 2008

அந்த நாட்கள்

ஏதோ ஒரு காரணத்தால்
அலுவலகப் பேருந்தை தவறவிட்ட
நான் நகரப் பேருந்தில் பயணிக்கலானேன்......

அன்று தான் அவளைக் கண்டேன்.....
இல்லைக் காணக் கிடைத்தேன்....
முடிவு செய்தேன் என் முதலும்
முடிவும் அவள் தான் என்பதை.....

பின் பேருந்தை தவற விடுவதே
என் வாடிக்கை ஆகிப் போனது...

பேருந்தில் ஏறியவுடன் என்
இருக்கண்களும் மழையைத் தேடுகின்ற
பயிரைப் போல் அவளையே தேடலாயின....

அவள்-ஒரு தேவதை....
இதைத் தவிர வேறதையும்
அறியேன் அவளைப் பற்றி ....

என் மனதில் காதல் பயிர்
முளைத்து நன்கு வளர ஆரம்பித்தது....
உரம் தண்ணீர் எதுவுமின்றி .....

சிறிய புன்னைகையில் ஆரம்பித்து
எப்படியோ என் ஊமைக்காதலுக்கு
பேசும் வரம் கிடைத்து
பேசத் தொடங்கியது அவளிடம்....

எப்படியாவது கூறிவிட வேண்டும்...
எந்திர உறுதியோடு வருவேன்....
அவளைப் பார்த்த பின் புறமுதுகு
காட்டி ஓடும் கோழையாகி விடுவேன் .....

ஒரு நாள் மனம்,தைரியம் போன்ற
என் நண்பர்கள் உடன் வர ,
காதல் என்னும் தாம்பூலத் தட்டினை
ஒற்றை காகிதத்தில் அவளிடம் சமர்ப்பித்தேன் .....

சம்மதத்தை உடனே தெரிவித்திருக்கலாம்.....
இல்லை....சற்றே நீண்டது கடவுளடனான
என் வேண்டுதல் பாவம் .....
படாதபாடு பட்டு விட்டார் என்னாலும்,
என் காதலாலும் சில நாட்கள்.....

அன்று முதல் ஒவ்வொரு
நாள் அவளைக் காணும் போதும் ,
ஆசிரியரைக் கண்டு அஞ்சுகின்ற
மாணவனைப் போல் அஞ்சலானேன்...

அருகருகில் அமர்ந்தும் அமைதிப்
படையே நீடித்தது ....
யார் முதலில் பேச என்பதற்கான
போராட்டம் ஒரு உலகப் போராகவே
நடந்தது எங்களுக்குள் ....

ஒரு முறை என் தாம்பூலத்தட்டு
மீண்டும் ஒரு காகிதத்தில் என்னிடமே
வந்தது...அவளிடமிருந்து.....

ஆனால் இம்முறை அவள் கூட
வந்த தோழிகள்
புன்னகையும் வெட்கமும் மட்டுமே!!!!

'மாலை ஆறரை மணிக்கு
கடற்கரையில் கூடுவோம் ' என்னும்
வார்த்தைகள் அச்சுக்களாய்
பொறிக்கப் பட்டிருந்தன
என் தாம்பூலத் தட்டினில்....

அப்பொழுது முதல் ஒவ்வொரு
நிமிடத்தையும் நகர்த்த
போராட்டம் தான் என்னுள்....

நேரமும் வந்தது...
பேருந்தும் வந்தது...
மழையும் வந்தது....
நானும் வந்தேன்....

ஆனால் அவள் வரவில்லை...
காத்துக் கொண்டிருந்தேன் .....

மழையில் நனைந்த மெல்லிய
மலரனே தத்தி தத்தி வந்தாள்
குழந்தையைப் போன்று ....

பதிலைத் தேடி அவள்
இதழையே வெறித்து பார்த்துக்
கொண்டிருந்த நான்
சற்றும் எதிர் பார்க்கவில்லை....

திடீரென அள்ளி அணைத்து
நெற்றி நுகர்ந்தாள்
' I LOVE YOU ' கூறி

மறக்க முடியவில்லை
அந்த நாட்களை....
--ரவிஷ்னா

17 comments:

MSK / Saravana said...

நல்லா இருக்கு.. :)

ஒரு காதல் கதையாய் எழுதியிருக்கலாமே..??!!
கலக்கலாய் இருந்திருக்கும்..

MSK / Saravana said...

Template is nice dude..
:)

ஜியா said...

:)))

Unknown said...

Great kavidhai... U r very talented!!!

ரகசிய சிநேகிதி said...

ம்ம்ம்... காதல் கவி(க)தை நல்லா இருக்கு..நல்ல வேளை கடைசியில் காதல் சுபமாய் முடிந்தது..:)

Ravishna said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல.

--ரவிஷ்னா

Ravishna said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல சரவண குமார் .

--ரவிஷ்னா

Ravishna said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல சந்தியா .

--ரவிஷ்னா

Ravishna said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல மேஹா

--ரவிஷ்னா

MSK / Saravana said...

அடுத்ததா பதிவு ஏதாவது எழுதற ஐடியா இருக்கா??

சீக்கிரம் அடுத்த கவிதையை போஸ்ட் பண்ணுங்க..
:)

Ravishna said...

உங்களுடைய கேள்விக்கான பதில் கண்டிப்பாக அடுத்த வாரம் கிடைக்கும் சரவண குமார் ...இப்பொழுது எனக்கு தேர்வு நேரம் என்பதால் சற்றே விடுமுறை அளித்துள்ளேன் என் கவிதைகளுக்கு ......

--ரவிஷ்னா

Ravishna said...

தங்கள் வருகை வரவேற்க படுகின்றது ஜி

Anonymous said...

irakasiya sneekithi ennum akkaavin pathivin uudaaka vanththullen.


enakkaaka www. vimbam.blogspot.com


pathivirku vanththu karuthu solviirkaLa


anpudan


apuchchi

நவீன் ப்ரகாஷ் said...

கதையான கவிதை
நல்லா இருக்கு
ரவிஷனா.. :)))

Ravishna said...

தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல நவீன் குமார் ....
உங்கள் வருகை வரவேற்க்கப் படுகின்றது ....
மீண்டும் வாருங்கள் ......

நட்புடன் ,
ரவிஷ்னா......

priyamudanprabu said...

திடீரென அள்ளி அணைத்து
நெற்றி நுகர்ந்தாள்
' I LOVE YOU ' கூறி

மறக்க முடியவில்லை
அந்த நாட்களை..../////

யாரலத்தான் மறக்க முடியும்?
சுகமான கவிதை
வாழ்த்துக்கள்

நவீன் ப்ரகாஷ் said...

----NOT TO PUBLISH----


// Ravishna said...

தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல நவீன் குமார் ....
உங்கள் வருகை வரவேற்க்கப் படுகின்றது ....
மீண்டும் வாருங்கள் ......

நட்புடன் ,
ரவிஷ்னா..... //

Hi Ravishana...
am Naveenprakash and not Naveenkumar... :)))