Thursday, August 7, 2008

என்னுடைய பல வேதனைகளில் சில

*நான் அழுகின்ற போதெல்லாம்
யார் யாரோ கேட்கிறார்கள் ,
ஏன் அழுகிறேன் என்று .
அப்பொழுது தான் நான் அதிகமாக அழ
நினைப்பேன் …
ஆனால் காரணம் தெரிந்த நீயும்
இவ்வாறு கேட்கையில் வந்த அழுகையும்
நின்று விடுகிறது .
வற்றி போன உன் இதயத்தை
நான் இனியும் என்னுடன்
வைத்துக் கொள்ள விரும்பவில்லை .....

*மறந்து போன என் இதயம்
உன்னை நினைக்கின்ற போதெல்லாம்
நான் என்னையே அரைந்து கொள்வேன்
இப்பொழுதெல்லாம் நான் என்
கன்னத்தில் அரைவதையே வேலையாககொண்டுள்ளேன்.

*நான் மரணத்தின் விளிம்பில் நிற்கிறேன்...
உன் பதில் எதுவாக இருந்தாலும்
என் மரணம் நிச்சயம்.
சரி என்றால் உனக்கும் இதயம் இருக்கின்றது
என்ற அதிர்ச்சியில் இறப்பேன்.....
இல்லை என்றால் உனக்கு இதயமே இல்லை
என்ற ஆச்சர்யத்தில் இறப்பேன்.....

*ஆவிகள் உள்ளனவா இல்லையா ?
தெரியவில்லை.
ஆனால் காதல் என்னும் இடுகாட்டில்
கல்லறை என்னும் இல்லத்தில்
என்னை போன்ற ஆவிகளும்,
உலாவுகின்றன.
உண்மையில் அது ஒரு தண்டனையை
தனக்குத் தானே கொடுத்துக் கொள்வது....

*நீ உலகத்தின் எந்த தேசத்தில் இருந்தாலும்
எந்த மூலையில் இருந்தாலும்
உன்னைக் கண்டுபிடித்து விடுவேன்....
அதிசயப் பிறவியை அனைவரும் அறிவர் அன்றோ???
கல் என்னும் இதயத்தை
சுமப்பவள் அல்லவா நீ???

*காதலில் தோல்வி கண்டவர்கள்
ஒரு தலைக் காதலில் தோல்வி
அடைந்தவர்களை கண்டு
நிம்மதியடைய வேண்டும்.
சொன்ன காதலில் தோல்வியைக் காட்டிலும்
சொல்லாத காதல் தோல்வி அடைவது
பெரியத் துன்பம்.



1 comment:

priyamudanprabu said...

*நான் மரணத்தின் விளிம்பில் நிற்கிறேன்...
உன் பதில் எதுவாக இருந்தாலும்
என் மரணம் நிச்சயம்.
சரி என்றால் உனக்கும் இதயம் இருக்கின்றது
என்ற அதிர்ச்சியில் இறப்பேன்.....
இல்லை என்றால் உனக்கு இதயமே இல்லை
என்ற ஆச்சர்யத்தில் இறப்பேன்.....
//////

ஒரு முடிவோடத்தான் இருக்கீங்க.......??