Tuesday, June 17, 2008

அழகு ஓரு வர்ணனை

தேவியே !!!உன் கூந்தலோடு
ஒப்பிடுகையில் அரச
மரத்தடியில் வீற்றிருக்கும்
விநாயகப் பெருமானும்
வெண்மை தான்!!!

பௌர்ணமி வட்ட நிலவை
வெட்டி எடுத்து, தட்டி
ஒட்டியது போன்றது உன்
நெற்றியில் உள்ள திலகம்!!!

கயல் போன்ற உன் விழிகளை
ஒவ்வொரு முறை விழிக்கும் போதும்
உன் பார்வை படாதா என்று
ஏங்குகின்ற ரோஜா மலர்கள் !!!

உன் மலரினும் மெல்லிய
பூவிதழ் விரித்து நீ
சிந்துகின்ற வார்த்தைகள்
ஒவ்வொன்றும் ஓரு ராகம்!!!

புறாவின் கழுத்தைப் போன்று
குறுகிய சிறு கழுத்தில்
நவமணிகள் மின்னுதல்,இரவில்
வானத்தில் உள்ள நட்சத்திரம்
மின்னுவதைப் போன்றது !!!

சுண்டு விரலும் உன் இடை
கண்டு மெலிந்து விட
எண்ணிக் கொண்டிருக்கிறது போலும் !!!

உன் பொற்பாதங்கள் தரையில்
படாமலிருக்க நான் தூவிய
குறிஞ்சி மலர்கள் உன்
காலுடன் கொஞ்சி விளையாட
எண்ணி குத்தி விட்டால்
என்னை மன்னித்து விடு பெண்ணே!!!

உன்னை வடித்த போது
பிரம்மனும் கவலை
கொண்டிருப்பான் , மானிடனாய்
பிறக்காமல் போனோமே என்று !!!
--ரவிஷ்னா

No comments: