Monday, October 20, 2008

சந்தேகங்களை கேட்க விரும்புகிறேன்


என் தேவதையே!!!
உன்னிடம் சில சந்தேகங்களை கேட்க விரும்புகிறேன்....
உன் அனுமதியோடு....
இறைவன்
உன் கூந்தல் கண்டு தான் மேகம் என்னும்
இருட்டினை படைத்தானோ??
உன் நுதல் கண்டு தான் தாமரையை செய்தனோ??
உன் கண்கள் கண்டு தான் மீன்களை படைத்தானோ??
உன் கன்னங்கள் கண்டு தான் மது கிண்ணங்கள் தந்தானோ??
உன் இரு இதழ் கண்டு தான் ரோஜா மலர் தந்தானோ??
உன் எச்சில் கொண்டு தான் அமிழ்தம் செய்தானோ
உன் உடல் கண்டு தான் தேவதை என்னும்
பெண்களை படைத்தானோ??
உன் நகங்கள் கண்டு தான் பிறையினை படைத்தானோ??
தெரியவில்லை எனக்கு...
ஆனால் உன்னை கண்டும்,உன்னைக் கொண்டும்
தான் நான் கவிதையினை படைக்கிறேன்...
--ரவிஷ்னா

1 comment:

Anonymous said...

நன்று.
ஆனால் எல்லா உவமைகளும் உவமானங்களும் மற்ற கவிஞர்களால் வ்ர்னிகபட்டவயே...