
உன் தலையில் சூடும் பூவாய்
நான் இருக்க விரும்புகிறேன்....
ஆனால் மறுநாள் காலையில்வீசி எறிந்து விடுவாய் ...
வேண்டாம் அப்பிறப்பு....
உன் நெற்றியில் இடும் திலகமாய்
நான் இருக்க விரும்புகிறேன்....
ஆனால் மறுநாள் குளியலின் போது
எடுத்து விடுவாயே !!!
வேண்டாம் அப்பிறப்பு....
உன் கண்களில் இடும் கரு மையாய்
நான் இருக்க விரும்புகிறேன்....
ஆனால் அதுவும் ஒரு நேரத்தில்
கரைந்து போகக் கூடும் ....
வேண்டாம் அப்பிறப்பு....
உன் உடலோடு ஒட்டிக் கொள்ளும்
உடையாய் நான் இருப்பேன்...ஆனால்
மறுநாள், நீ அழுக்கென்று ஒதுக்கி விடுவாய்...
வேண்டாம் அப்பிறப்பு....
உன் கணவனாய் நான்
இருக்க விரும்புகிறேன். ஆனால்
நமக்கென்று ஒரு குழந்தை பிறந்தால்
நீ என்னை கவனிக்க மாட்டாய்.
வேண்டாம் அந்த பிறப்பும்......
உன் கால்களை கட்டிக் கொள்ளும்
உன் குழந்தையாய் இருந்திட விரும்புகிறேன்...
அப்பொழுது தான் நான் சினுங்கிடும் போதும்,
சிரித்திடும் போதும் முத்தங்கள் தந்து
என்னைக் கொஞ்சிடுவாய்....
அதுவே வேண்டும் எனக்கு.......
--ரவிஷ்னா
14 comments:
//உன் குழந்தையாய் இருந்திட விரும்புகிறேன்...
அப்பொழுது தான் நான் சினுங்கிடும் போதும்,
சிரித்திடும் போதும் முத்தங்கள் தந்து
என்னைக் கொஞ்சிடுவாய்....
அதுவே வேண்டும் எனக்கு.......//
Cute கவிதை, ரவிஷ்னா !
nalla irukuரவிஷ்னா kavithia varikal
nalla irukuரவிஷ்னா kavithia varikal
வித்தியாசமான ஆசை பிளஸ் கவிதை..... :)) ரொம்ப அழகு.. :))
தங்கள் முதல் வருக்தைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல சவாரியா...
மீண்டும் வாருங்கள்...
--ரவிஷ்னா
தங்கள் முதல் வருக்தைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல காயத்ரி ...
மீண்டும் வாருங்கள்...
--ரவிஷ்னா
தங்கள் முதல் வருக்தைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல ஸ்ரீமதி ...
மீண்டும் வாருங்கள்...
--ரவிஷ்னா
nallarukkunga..
வாவ்!!!!!!!!!
அழகான ஆசை.......!!!
ஸோ கியூட் உங்க கவிதை:))
மிகவும் ரசித்தேன்!!
நல்லாயிருக்கு நீங்கள் எழுதிய விதம்
சரவணன்
உங்க கதை ரொம்ப நல்லா இருந்தது...ரொம்ப இயல்பா...ஒரு வாலிபரின் மனத்துடிப்பை துல்லியம சொல்லி இருந்தீங்க
ரவிஷ்னா,...சான்சே இல்ல...நெஜமாச் சொல்றேன் நீங்க சொல்றது (நட்பு, காதல் பத்தி) நூத்துக்கு நூறு உண்மை!!!
மிகவும் நன்றி சவாரியா.....
மறுபடியும் வாருங்கள்....
--ரவிஷ்னா
Nice.
Unga perukku enna artham ?
அழகான கவிதை...வித்தியாசமான ஆசையோடு..வாழ்த்துக்கள் ரவிஷ்னா...
Post a Comment