
நீ என்னை மறந்து
நான் உன்னை மறந்து
நாம் உலகத்தினை மறந்து
உயிர் தந்த பெற்றோரை மறந்து
உயிர் தந்த பெற்றோரை மறந்து
உடனிருக்கும் நட்பினை மறந்து
தொலைபேசியில் மணிகணக்காய்
அரட்டை அடிப்பதில் இல்லை -
உண்மைக் காதல்.....
கடற்கரையில் அமர்ந்து
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
கனவு காண்பதில் இல்லை -
உண்மைக் காதல்.....
உல்லாச உணவகங்களில்
ஒரு குவளை தேநீரை
ஒரு மணி நேரம் உறிஞ்சுவதில் இல்லை-
உண்மைக் காதல்.....
உண்மையான காதல் என்னவெனில் ,
உறங்கச் செல்லும் முன் ஒரு நிமிடம்
உன்னை நினைக்கிறேன்-
இது என் உண்மைக் காதல்.....
பேருந்தில் பயணிக்கின்ற போது
சன்னலோர இருக்கையில் அமர்ந்து
சில்லென காற்றின் ஈரப்பதத்தில்
உன்னை நினைக்கிறேன்-
இது என் உண்மைக் காதல்.....
நான் உணவுண்ணும் போது
முதல் வாய் எடுத்து வைக்கையில்,
நீயும் உண்டிருப்பயா???
என்று எனக்கு நானே கேட்டுக் கொள்வேன்....
இது என் உண்மைக் காதல்......
இது வரை உன்னை நான் பார்த்த தில்லை ...
கதைகள் பல பேசியதில்லை.....
இவ்வாறுதான் இருப்பாய் என்று
எனக்குள்ளே உனக்கு ஒரு உருவகம்
கொடுத்து ஒரு உருவமாய் பார்க்கிறேன்.....
வா பெண்ணே காதல் என்னும் கடலில்
ஊடல் என்னும் ஓடத்தில்
ஊடல் என்னும் ஓடத்தில்
உலகினை சுற்றலாம் கனவில்......
நீ ஒரு குழந்தை....
நானும் ஒரு குழந்தை.....
காதல் நம் குழந்தை......
நீ !!!!நான்!!!! காதல்!!!!!
இது போதும் எனக்கு
--ரவிஷ்னா
8 comments:
kalakal kavithai....
all the best...
if you can also visit kavikuyil.blogspot.com
--kavikuyil
நல்லா இருக்குங்க!
உண்மைக்காதல் இதுதானென்று
உணர்த்துகிறது.
இன்று உணவு உண்ணும்போது
....நினைத்துக்கொண்டேன்.
தங்கள் முதல் வருகைக்கு நன்றிகள் பல சுரேகா...மீண்டும் வாருங்கள்....
--ரவிஷ்னா
தங்கள் வருகைக்கும் உணர்வு வெளிப்பாட்டிற்கும் நன்றிகள் ஜி
--ரவிஷ்னா
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல கவிக்குயில்.மீண்டும் வாருங்கள்....
--ரவிஷ்னா
அழகான கவிதை
ஒரு ஆச்சிரியம் நான் எழுதிய 'ஆனாலும் காதலிக்கிறோம்'
கவிதையின் கருவும் உங்கள் கவிதையின் உட்கருவும் ஒரு இடத்தில் இனைவதை பார்க்கிறேன்
http://priyamudan-prabu.blogspot.com/2008/08/blog-post.html
Azhagu kavithai
chromosome obeys replace cirex racism maturity keynote minitrack esprit suvorikova contribution
lolikneri havaqatsu
Post a Comment