'படிக்காதவனாய்' இருந்த என்னை
'கல்லூரி' வரை செல்ல வைத்த
என் 'செல்லமே'.உன்னை காணும்
போது என் 'மனசெல்லாம்'
ஒரு வித 'மின்னலே'
'12B' பேருந்தில் பயணம் செய்கிற
நாளெல்லாம் உன்னை கண்டேன்.
இதுவரை எனக்கு தெரியவில்லை
'யாரடி நீ மோகினி' .
உன்னை 'கண்ட நாள் முதல்'
'உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்'
உன் மீது வைத்த 'ப்ரியமுடன்'
எழுதுகிறேன் ஏனோ ஒரு 'காதல் கவிதை' ...
'அழகிய தீயே' உன் 'முகவரி'
கொடுத்து விடு.இல்லை எனில்
உன் 'சூர்யப் பார்வை' யால் என்னை
சுட்டெரித்து விடு ...
உன்னை 'முதல் முதலாய்'
'பார்த்த நாள் முதல்' நான் 'காதல் கொண்டேன்'....
நீ சரி என்று சொன்னால் பெண்ணே உன்னை
என் 'கண்ணுக்குள் நிலவாய்' வைத்து
பாதுகாப்பேன் .....
இறைவனே அவளிடம் நான் என்
காதலை தெரிவிக்க எனக்கு
'வல்லமை தாராயோ' ......
நீ என் பெயரை கூறி
அழைக்கும் போதெல்லாம் என்
'உள்ளம் கேட்குமே' மீண்டும் மீண்டும் ...
உண்மையில் அது ஒரு 'காதல் கோட்டை' ...
பெண்ணே நீ என்னிடம் உன்
'காதல்' (லை ) தெரிவித்த போது
நான் உன்னில் 'கண்டேன் சீதையை' ....
பின்பு இந்த 'ராமன் தேடிய சீதை'
இவள் தானோ என்று
ஒரு 'தேவதையை கண்டேன்' ...
பெண்ணே!!!'இன்று முதல் '
நீ என்னை காதலிப்பதன் மூலமும்
நான் உன்னை காதலிப்பதன் மூலமும்
நாம் 'காதலுக்கு மரியாதையை' செய்து
'காலமெல்லாம் காதல் வாழ்க' என்போம் .....
--ரவிஷ்னா
8 comments:
திரைபட பெயர்களை வைத்தே ஒரு அழகான கவிதையா?? அற்புதம்!!!
என் கவிதையை படித்தமைக்கு நன்றி திவ்யா.
மீண்டும் வாருங்கள்
என்றும் நட்புடன்
ரவிஷ்னா....
hai
its a old one.Try some new ideas
It is very nice ravishna
With Regards,
Karthikeyan...
இவ்வ்ளொ படம்தான் பார்த்தீர்களா?
அன்புடன் அருணா
தங்கள் வருகைக்கு நன்றி அருணா. மீண்டும் வாருங்கள்.
நட்புடன்
ரவிஷ்னா
super ra kavithai eluthuringa
Thanks a lot lalitha
Please,visit again
urs Friendly,
ravishna
Post a Comment