Monday, March 14, 2011

என்ன தான் வேண்டும் உனக்கு???

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
காற்றில் நடக்கையில் தூசி விழுந்தாலும்
கண் சிமிட்டாத நான்,
உன்னை பார்த்த நொடியிலிருந்து என் ஒற்றை
கண் மட்டும் துடிக்கலாயின !!!

உன் சுவாசக் காற்றினையே நான்
சுவாசிக்கலானேன்!!!

உன் பெயரையே உச்சரிக்கலானேன்!!!
உன்னை வர்ணிப்பதே தொழிலாய்க் கொண்டேன்!!!

பசி, தூக்கம், சுற்றம், நட்பு, உறவு மறந்து
உன்னையே எண்ணலானேன்!!!

இப்படி என் இதயத்தை கொள்ளை கொண்டு விட்டாய்!!!
இன்னும் என்னிடத்தில் என்ன இருக்கிறது!!!

ஏன் என்னை இன்னும் தொடர்கிறாய்???
விட்டு விடு, இனியாவது நான்
வாழத் தொடங்குகிறேன்!!!

இன்னும் என்ன வேண்டும் உனக்கு???

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ரவிஷ்ணா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Sunday, March 6, 2011

என்னை பிரிதல் உனக்கு மகிழ்வா??

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நான் உன்னை இன்னும் காதலிக்கிறேன்
என்று மேலும் கூறி உன்னை மீண்டும்
என்னை காதலிக்க வைக்க விரும்பவில்லை....

என்று நீ நானில்லாத வாழ்க்கை
மகிழ்வினை தரும் என்று எண்ணினாயோ
அன்றே நீ என்னை விட்டு விலகி சென்றுவிட்டாய்.....

என்னுடனான உன் பிரிவு மகிழ்வினை
தரும் என்று நீ எண்ணினால்
அவ்வாறே இருந்து விடு...

உன் மகிழ்வே எனக்கும் சிறு மகிழ்வினை
தருமென்று நீயும் எண்ணிக்கொள்.....
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ரவிஷ்ணா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நிம்மதியாய் இரு நீ மட்டும்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சூரியனும் உருகிவிடும் படியான ஒத்த
குளிரினை கொண்ட மார்கழி மாத
கார்விருளில் என்னறயினுள் ஏதோ ஒரு மூலையில்
உறங்கி கொண்டிருந்த என்னை எழுப்பி

என் தூக்கம் கலைத்து சென்றாய் உன் காதலை கூறி....

காக்கைகளும் ஏனைய பறவைகளும்
தன் இனத்துடன் மீண்டும் இணைகிற
அந்த மந்தமான ஒரு மாலை பொழுதினில்,

மீண்டும் என் தூக்கம் கலைத்து சென்றாய் உன் பிரிவை கூறி.....

இரண்டுகுமானதாய் ஒரு வேறுபாட்டினையும் கூறிகிறேன்
கேளடி என் காதலியே!!!

மேற் கூறிய இரு வேளைக்கு பிறகு
நிம்மதி கெட்டது என்னவோ எனக்கு மிகவும் அதிகம்....

என் சீண்டல்கள் இல்லமால் நிம்மதியாய்
இருப்பது என்னவோ உனக்கு பிடித்திருகிறது போலும்!!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ரவிஷ்ணா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Saturday, March 5, 2011

காதல் => நட்பு

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
காதலை காட்டிலும் நட்பு தான்
சிறந்தது....
இது என் முடிந்து போன காதல்
மெய்ப்பித்தது....
ஏனெனில் அவள் என்னுடனான காதலை தான்
முரித்துகொண்டாள்...
என்னுடனான நட்ப்பை அல்ல...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ரவிஷ்ணா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

முடியவில்லை...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
என்னை மறந்து விடு என்று நகையாடி விட்டு  சென்றுவிட்டால்
என் இதய தேவதை...
அன்று முதல்
அவளை பார்க்க வேண்டாம் என்று எண்ணுகிறேன்
கண்கள் மறுக்கின்றன.....
அவள் மனம் நுகர வேண்டாம் என்று எண்ணுகிறேன்
என் சிறு மூக்கும் மறுக்கின்றன.....
அவள் பற்றி பேச வேண்டாம் என்று எண்ணுகிறேன்
என் இதழும் மறுக்கின்றன.....
அவளை நினைக்க வேண்டாம் என்று எண்ணுகிறேன்
மனமும் மறுக்கின்றன.....
அவள் கொடுத்த பரிசுகளையும் அவளின் புகைப்படங்களையும்
தீண்ட வேண்டாம் என்று எண்ணுகிறேன்
கரட்டு கைகளும் மறுக்கின்றன.....
இவை எதுவும் என்னால் இயலாததால்
மதுக்கடையை நோக்கி செல்கிறேன்....
ஆனால் கால்களும் பயணிக்க மறுக்கின்றன.....
என்னையே அழிக்க எண்ணி ஒரு முழம்
கயிற்றினை தேடி எடுத்து விட்டேன்.....
இதுவரையில் எனக்கு உதவாத மேல் சொன்ன என் உறுப்புகள்,
இப்பொழுது மட்டும் பேருதவி செய்கின்றது......
என்னதொரு விந்தை...!!!!!
அவளுக்கு பிடிக்காதது போல், என்னை என் உடலுக்கும்
புடிக்கவில்லையோ ???!!!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ரவிஷ்ணா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அதிகரித்த நினைவுகள்..

தன்னை மறந்து விடும்படி
என்னிடம் சொல்லி சென்றாள் என் காதலி...
இப்பொழுது தான் நான் அவளை
அதிகமாய் நினைக்கிறன் ........

ஒரு வேளை என்னிடம் சொல்லாமலே
இருந்திருக்கலாம்....... தன்னுடைய காதலை....

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ரவிஷ்ணா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~