*ஒரு நாளைக்கு எத்தனை முகங்களை
பார்த்தாலும் மீண்டும் மீண்டும்
பார்க்கத் தூண்டும் ஒரு வட்ட நிலா
உன் முகம்...
*ஒரு பார்வையாலேயே என்னை
ஊமை ஆக்கி விடுகின்ற காந்த கண்கள் ...
*நீ என் உடன் இருப்பாய் என்றால்
நரகத்திலும் நான் வசிக்கத் தயார்.
*நான் என்னையே தொலைத்து விட்டேன்...
தொலைத்த இடம் தெரிந்தும் தேட மறுக்கிறது மனம் .
இருப்பது உன்னிடம் தானே
பத்திரமாக இருக்கும் என்கிற நம்பிக்கை போலும்...
--ரவிஷ்னா
Monday, September 15, 2008
Sunday, September 7, 2008
நீ வேணும் டா என் செல்லமே
நீ வேண்டும் நீ வேண்டும்
என்றென்றும் நீ வேண்டும்....
நான் அழுகின்ற போது
விழியோரம் வழிந்திடும் கண்ணீரை
துடைத்திட நீ வேண்டும் ....
நான் சோகமாய் இருக்கின்ற போது
நகைச்சுவை கூறி சிரிக்க வைக்க
நீ வேண்டும் நீ வேண்டும் ....
நான் நடந்திடும் போது என்
விரல் பிடித்து நடந்திட
நீ வேண்டும் நீ வேண்டும் ....
நான் மகிழ்ச்சியாய் இருக்கின்ற
தருணங்களில் அதை பகிர்ந்திட
நீ வேண்டும் நீ வேண்டும் ....
நான் மழையில் நனைந்தால்
செல்லமாக திட்டி, தலைத் துவட்டிட
நீ வேண்டும் நீ வேண்டும் ....
நான் பேருந்தில் பயணிக்கின்ற போது
உடன் அமர்ந்து பயணிக்க
நீ வேண்டும் நீ வேண்டும்.....
நான் இரவு நீண்ட நேரம்
விழித்திடும் போது , கையில் காபியுடன்
"இதை குடி டா " என்று கூறிட
நீ வேண்டும் நீ வேண்டும் ....
நான் உறங்குகையில் என்
தலை கோதி "என் செல்லம்"
என்று ஒரு முத்தம் தர
நீ வேண்டும் நீ வேண்டும் ....
செல்லமாய் ஒரு பெயர்
வைத்து என்னை அழைத்திட
நீ வேண்டும் நீ வேண்டும் ....
சில நேரங்களில் என் தாயாய்
சில நேரங்களில் என் தோழியாய்
சில நேரங்களில் என் மனைவியாய்
சில நேரங்களில் என் குழந்தையாய்
இருந்திட
நீ வேண்டும் நீ வேண்டும்
என் செல்லமே ....
--ரவிஷ்னா
என்றென்றும் நீ வேண்டும்....
நான் அழுகின்ற போது
விழியோரம் வழிந்திடும் கண்ணீரை
துடைத்திட நீ வேண்டும் ....
நான் சோகமாய் இருக்கின்ற போது
நகைச்சுவை கூறி சிரிக்க வைக்க
நீ வேண்டும் நீ வேண்டும் ....
நான் நடந்திடும் போது என்
விரல் பிடித்து நடந்திட
நீ வேண்டும் நீ வேண்டும் ....
நான் மகிழ்ச்சியாய் இருக்கின்ற
தருணங்களில் அதை பகிர்ந்திட
நீ வேண்டும் நீ வேண்டும் ....
நான் மழையில் நனைந்தால்
செல்லமாக திட்டி, தலைத் துவட்டிட
நீ வேண்டும் நீ வேண்டும் ....
நான் பேருந்தில் பயணிக்கின்ற போது
உடன் அமர்ந்து பயணிக்க
நீ வேண்டும் நீ வேண்டும்.....
நான் இரவு நீண்ட நேரம்
விழித்திடும் போது , கையில் காபியுடன்
"இதை குடி டா " என்று கூறிட
நீ வேண்டும் நீ வேண்டும் ....
நான் உறங்குகையில் என்
தலை கோதி "என் செல்லம்"
என்று ஒரு முத்தம் தர
நீ வேண்டும் நீ வேண்டும் ....
செல்லமாய் ஒரு பெயர்
வைத்து என்னை அழைத்திட
நீ வேண்டும் நீ வேண்டும் ....
சில நேரங்களில் என் தாயாய்
சில நேரங்களில் என் தோழியாய்
சில நேரங்களில் என் மனைவியாய்
சில நேரங்களில் என் குழந்தையாய்
இருந்திட
நீ வேண்டும் நீ வேண்டும்
என் செல்லமே ....
--ரவிஷ்னா
Subscribe to:
Posts (Atom)